Home | Staff | Students | Facilities | Gallary | Achievements | Notes | Downloads
 
           
About Surrounding Environment (Majeedpuram)    

மஜீட்புரம்

அமைவிடம்

  • சம்மாந்துறை நகரிலிருந்து சுமார் 12km தொலைவில் அமைந்துள்ள மிக சிறிய அழகான கிராமம். இக்கிராமத்தை சூழவும் நெற்காணிகள் காணப்படுவதால் வாழ்வதற்கு சுகந்தமான சூழல் கிடைக்கிறது.
  • இது சம்மாந்துறை, அம்பாரை பிரதான வீதியின் (A31) மல்வத்தை சந்தியிலிருந்து சடயந்தலாவ நோக்கி 2km தூரம் செல்லும் போது இடையில் இக்கிராமம் அமைந்துள்ளது.

பின்னணி

  • 1960 ஆம் ஆண்டு கல்லோயா பலநோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இக்கிராமம் உருவாக்கப்பட்டது.
  • இக்கிராம உருவாக்கத்தில் பிரதான பங்காற்றிய முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமாகிய மர்ஹூம் M.A. அப்துல் மஜீட் (B.A.)அவர்களின் பெயரே இவ்வுருக்கு சூட்டப்பட்டுள்ளது.
  • ஆரம்பகாலத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து குடியேறினர்.

பிரதேச தகவல்கள்

  • கிராம நிலதாரி பிரிவு         மல்வத்தை – 03. (கி. நி. பி. இல : 89E)
  • கிராம நிலதாரி                    ஜனாப் A.R.M. சல்மான் (தொலைபேசி இல : 0777411646)
  • பரப்பளவு                            9.6Ha
  • சிங்கள (16), முஸ்லிம் (280) இனங்களைச் சேர்ந்த 296 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர்.
  • சனத்தொகை    1046  (ஆண் – 485, பெண் - 561)
  • விதவைகள்       65 பேர்

சமூக நிறுவனங்கள்

  • பாடசாலை - 1      (1966ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.)
  • பள்ளிவாசல் – 3
  • சனசமூக நிலையம்
  • சுகாதார நிலையம்
  • கிராம தொழிற்பயிற்சி நிலையம் 

பொருளாதார நிலை
மக்களின் பிரதான பொருளாதாரம் கூலி விவசாயமும், மீன் வியாபாரமும், இதர கூலித் தொழில்களுமாகும் ஆகும். இதனால் இக்கிராமத்தின் வீட்டுத் தலைவர்களின் வருமானம், தமது வீட்டு நிலைமையை மாத்திரமே ஈடுசெய்யப் போதியதாகையால் தமது பிள்ளைகளின் கல்வியில் போதிய கவனம் செலுத்த அவர்களால் முடிவதில்லை. இக்குறையை நிவர்த்திக்க அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை இக்கிராமம் வேண்டிநிற்கின்றது.

 

   
     
     
Source : A.L. Aswer (B.A.), Designed by: S.L.Abdul Majeed.